மொக்கையின் மொக்கைகளைக் கட்டுடைத்துத் தெறிக்க விட்ட நீயா நானா.

திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளையோ, சென்டிமென்ட் காட்சிகளையோ பார்க்கும்போது ஒரு வேளை அது ரசிக்க முடியாமல் போனாலோ அல்லது தனக்குப் பிடிக்காத நடிகரின் படமாக இருந்தாலோ 

"இதெல்லாம் தமிழ்ப்படத்துலதான் நடக்கும்"

"தமிழ்ப்படம்னாலே அப்படித்தான்"

"யப்பா இந்தத் தமிழ்சினிமாக்காரன் திருந்தவே மாட்டான்"

இப்படியான சலிப்பான, மேதாவித்தனமான வசனங்களைக் கேட்க முடியும். தனக்குப் பிடிக்காத படமென்றால ஐன்ஸ்டீன் அளவுக்கு ஆராய்ந்து குறை சொல்ல அறிவிலிகளால் கூட முடியும். இங்கே கமல் படத்தை விமர்சிக்கும்போது ரஜினி ரசிகனுக்கும் பகுத்தறிவு பிறக்கும். விஜய் படத்தை விமர்சிக்கும்போது அஜித் ரசிகனும் பகுத்தறிவுவாதியாவான். சூர்யா படத்தை விமர்சிக்கும்போது விஜய் ரசிகனுக்கும் ஆறாவது அறிவு வேலை செய்யும். 

ஆனால் இந்த மேதாவிகள் அனைவரும் ஒன்று பட்டு ரசிக்கும் காட்சிகள் எதுவாக இருக்கும். வேறு என்ன பெண்களைக் கிண்டல் செய்யும் வசனங்கள். தேவையில்லாமல் திட்டும் பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கும்போதுதான். பெண்களைக் குறை சொல்வதை, பொண்ணுங்கன்னா இப்படித்தான் பண்ணுவாளுங்க மச்சான், இந்தக் காலத்துப் பொண்ணுங்கல்லாம், மச்சி இப்பல்லாம் பொண்ணுங்க என்றெல்லாம் தொடங்கும் அபத்த வசனம் போன்றவற்றில் இவர்கள் அனைவரும் தலைவர் பேதமின்றி ஒருமித்து ரசிக்கின்றனர். 

சந்தானம், சூரி, சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற மொக்கைத் திலகங்கள் திரைப்படங்களில் ஊத்தை வாயால் உளறுவதையே உண்மை போல எல்லா இடங்களிலும் நம்புகின்றனர். ஆண்கள் தங்களுக்கிடையே பேசிக்கொள்ளும்போதும், அடுத்தவர்களிடம் பேசும்போதும், ஏன் பெண்களுடன் பேசும்போதும் கூட இதையே மிகச்சாதரணமாக உண்மை போலப் பேசித் திரிகின்றனர். இந்த இடத்தில் மட்டும் இந்தத் தமிழ் சினிமாவே இப்படித்தான் என்று யாரும் சிந்திக்க மாட்டார்கள். எம்ஜிஆர் ரசிகன் தொடங்கி சிம்பு ரசிகன் வரை இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் என்ற மொக்கைத்தனத்தில் ஒன்று படுவார்கள். 


இந்நிலையில் இந்தக் கருத்துக்களை வைத்திருப்பவர்கள் பெண்கள் இரண்டு கேள்வி கேட்டால் பதில் தெரியாமல் முழிப்பார்கள். எதற்காக ஒரு கருத்தினை சொல்கிறோம் என்றே தெரியாமல் சும்மா பொண்ணுங்களே இப்படித்தான் என்ற கருத்தை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரியும். முக்கால்வாசிப் பேர் இப்படித்தான் திரிகிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் இவர்களைத் தெறிக்க விட்டதைக் கண்டு களியுங்கள்.
புகைப்படம் - நன்றி ஃபேஸ்புக்
இதில் கேள்வி கேட்டு பின்னியெடுத்த பெண்ணை, கேவலப்படுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் மொக்கைகள், சொந்தமாக யோசிக்கத் தெரியாமல், தமிழில் கூட எழுதத் தெரியாத கிறுக்குகள், மீம் என்ற பெயரில் கிண்டலடித்துத் திரிகின்றன. அவள் கேட்ட கேள்விக்கு இந்த முட்டாள்களிடம் பதிலே இல்லை. அந்த வெறுப்புதான். ஏதோ படங்களின் பிரபலமான வசனம் பேசும் திரைச்சொட்டையும்(Screenshot), இந்தப் பெண்ணின் படத்தையும் இணைத்து தங்கள் சொந்தக் கழிவுகளைக் கலாய்ப்பதாகக் கருதிக் கொண்டு கழிந்து வைத்துக் கொண்டுள்ளனர். ஆகவே எனது முதன்மைப் பாராட்டு இந்தப் பெண்ணுக்குத்தான். 



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. பெண்கள் ஆணாதிக்க ஆண்களுக்கு கொடுத்த செருப்படியை மிக மிக ரசித்தேன்.
    எந்த காலத்தில் இருக்கிறார்கள் நாம் பசங்க என்பதை உரித்த கோபிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எந்த காலத்தில் இருக்கிறார்கள் நாம் பசங்க// பொண்ணுங்களைக் குறை சொல்லும் விடயத்தில் 50 வருடங்கள் பின்னோக்கியும், தங்கள் தவறுகளை தவறுகளாகவே கொள்ளாமல் இருப்பதில் 100 வருடம் முன்னோக்கியும் இருக்கிறார்கள்.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்