இவர்கள் இப்படித்தான் - எப்போது திருந்துவார்கள் ?

எங்கள் ஊரில் இப்போதுதான் சாக்கடையைக் கட்டியிருக்கிறார்கள். இன்னும் ஈரம் கூடக்காயவில்லை. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரிசையாகக் கடைகள் இருக்கின்றன. எந்தவொரு கடையிலிருந்தும் முதலடி வெளியே வைத்தால் சாக்கடைக் கால்வாய்தான். இதையே சௌகரியமாக எடுத்துக் கொண்டு கடையிலிருக்கும் குப்பையையெல்லாம் கூட்டி சாக்கடையிலேயே கொட்டுகிறார்கள் அல்லது கடையிலிருந்து கூட்டி வெளியே தள்ளி விட்டால் அது நேராக சாக்கடைக் கால்வாயிலேயே விழுகிறது. கடைகள் என்றாலே எத்தனைகுப்பைகள் சேரும் என்று சொல்லவேண்டியதில்லை. இப்படி இருந்தால் எப்படி சாக்கடை நீர் போகும் என்று தெரியவில்லை. வீடுகளிலிருந்து குப்பையைக் கட்டி வெளியே வீசுகிற சிலரும் சாக்கடைக் கால்வாயிலேயே வீசுகிறார்கள். இன்னும் சில தெய்வங்களுக்கு தண்ணீர் தேங்கி நின்றாலே அல்லது சாக்கடையைப் பார்த்தாலே பத்து நாள் சேமித்த எச்சிலைக் காறித் துப்பாமல் இருக்க முடியாது. அதைத் தூய்மை செய்பவன் ஒரு மனிதன் என்று நினைத்தால்தானே. அங்கே வீசக் கூடாது என்று தெரியாதா இல்லை குப்பையை நடந்து போய் கொட்டுவது கௌரவக் குறைச்சல், நிக்கற இடத்திலிருந்தே விட்டெறிவதுதான் ஸ்டைல். குப்பையை கைகளால்தான் மனிதர்கள் அள்ளிச் செல்கின்றனர். அதில் எச்சில் துப்பக் கூடாது என்பதற்கெல்லாம் பெரிய மகாத்மா மாதிரி சிந்திக்கிறவர் மட்டுமே செய்ய வேண்டுமா ? அதான் நமக்கெல்லாம் தெரியாதே. அதே போல் பொதுக்கழிவறைக்குச் சென்றால் தண்ணீர் ஊற்றாமல் வருவது, ஃபளஷ் செய்யாமல் வருவது, சிறுநீர் கழிக்குமிடத்து பபிள் கம்மை துப்பி வைப்பது,(ஆமா எதுக்கு ஒண்ணுக்குப் போகும்போது அடுத்தவனுடையதை எட்டிப் பாக்கறது - தேசியப்பழக்கம்), பின்பு கழிவு நீர் தேங்கி நாறினால் அரசாங்கத்தைத் திட்டுவது, துபாயைப்பார் அமெரிக்காவைப் பார் என்று கத்த வேண்டியது.  இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி மாற்றுவது.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. இதற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது... எல்லாம் தானாகத் தான் திருந்த வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனை நண்பரே! மனிதனாக நினைத்து மாறா விட்டால் மாற்றம் என்பது வெகு தொலைவில் தான். மாற்றம் வேண்டுமென்பதே நமது விருப்பம். பார்க்கலாம். சமூக நோக்கம் கொண்ட சிந்தனைக்கு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்