இந்திய விடுதலை நாளில் - இந்தியிடமிருந்து விடுதலை வேண்டி - ‪#‎StopHindiImposition‬

நேற்று இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா முழுவதும், இந்தியர் வாழும் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அதே நேரம் ட்விட்டரில்  ஹிந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துக்களைத் தாங்கிய சுட்டுரைகள்/கீச்சுகள்/ட்விட்டுகள் ‪#‎StopHindiImposition‬ என்ற ஹாஷ்டாக் மூலமாக தொடர்ந்து பகிரப்பட்டு, அது ட்விட்டர் ட்ரென்டில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் "பரபரப்பான" தலைப்பாக வைக்கப்பட்டது. பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள், வெளியிடுவதற்கென்றே சேமித்து வைக்கப்பட்டு பின்பு பகிரப்பட்டன. சிலர்  சொந்தக் கருத்துக்களையும் பகிர்ந்தனர்.


இதன் மூலம் மக்கள் தொடர்பு ஊடகங்களில் செய்தியாகவும் எதிர்பார்த்தபடி வந்தது. இதன் மூலம் ஹிந்தி தேசிய மொழி, இந்தியா முழுவதும் ஹிந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும், இதன் மூலம்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும், கலாச்சாரம் காக்கப்படும் என்றெல்லாம் உளறி வரும் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவிலிகள் முதல் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவாளிகள் வரை எல்லாரிடமும் சிறு சலனத்தை ஏற்படுத்த முடிந்தது.


இன்னொரு முக்கியமான சேதி, இந்த இத்துப்போன தமிழன்தான் இந்தி எதிர்ப்பு பேசி நாசமானான், மற்றவர்கள் (தமிழல்லாத மற்ற தென்னிந்திய மாநிலங்கள்) எல்லாம் ஹிந்தி படித்து வளமாக வாழ்கிறார்கள் என்றெண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு - இந்தி ட்விட்டரில் அதிகமாக பங்கெடுத்தவர்கள் கன்னட ட்விட்டர்கள். இவர்கள்தான்  ஹிந்தித் திணிப்பால் அதிகமான பாதிப்படைந்த மாநிலக்காரர்கள். பெரும்பாலும் படித்த இளைஞர்கள்தான் இந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் ட்விட்டியவர்கள்.

Promote Linguistic Equality: Hindi is Not the National language of India - மொழிச் சமத்துவத்தை பரப்பு - ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அன்று என்பதே இந்த ஃபேஸ்புக் குழுவின் பெயர். இதில் இந்தியா முழுவதுமிருந்தும் சில ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் ஹிந்தித் திணிப்பு குறித்தும், "இந்தி"ய அரசின் நடவடிக்கைகள், ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்தும் விமரசனங்களும், விவாதங்களும் நடக்கின்றனர். பிராந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.  இது ஹிந்தி மொழியின் மீது வெறுப்பை வளர்ப்பதற்காகவோ, ஹிந்தி பேசும் மக்களின் மீதான இனவெறியை வளர்ப்பதற்காகவோ இல்லை. தாய்மொழியைக் காக்கும் தற்சார்பு, தற்காப்பு உணர்வின் காரணமாகவே ஹிந்தி மொழி பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் திணிப்பதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அனைத்து மொழிகளையும் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்தி பேசுவோர்க்கு மட்டும் இருக்கும் சிறப்புரிமை ஆகியவை டிவிட்டரில் வந்த கருத்துக்களில் முதன்மையாக இருந்தன.

பஞ்சாபியர்கள் எப்படி ஹிந்தி பேசியதால் மொழியினை இழப்பார்கள் என்று விளக்கும் படம். நாமே சீக்கியர்களை ஹிந்தி பேசுவோர் என்றுதானே நினைக்கிறோம்.



ஊடகங்களில் இது குறித்து வந்த செய்திகள்

தி ஹிந்து வில் வந்த செய்தி

ஐபிஎன்லைவ் - இல் வந்த செய்தி

பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள் அனைத்தும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் (கன்னடம், தெலுங்கு, மராத்தி) வெளியிட்டவை அடங்கும். 

(படங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்-லிருந்து எடுக்கப்பட்டவை)
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. நல்லதொரு முயற்சி . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    நேற்று கன்னட , பெங்காலி இளைஞர்கள் மிகபெரிய அளவில் இந்த பரப்புரையை மேற்கொண்டனர். இவர்கள் ஏன் இந்தியை எதிர்க்கவேண்டும். இவர்கள் தான் இந்தியை படிக்கிறார்கள், பேசுகிறார்கள் பிறகு ஏன் இந்தியை எதிர்க்கவேண்டும் என தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு கேள்வி எழும்/எழவேண்டும். அவர்களின் இந்த எதிர்ப்புக்கு ஒரே காரணம் அவர்களின் மொழி ஹிந்தி பயன்பாட்டால் அழிவின்பாதையில் செல்வதை நன்கு உணர்ந்துள்ளனர்.

    இப்போது தெரிகிறதா தமிழன் ஏன் இந்தி திணிப்பை ஆரம்பகாலம் முதற்கொண்டு எதிர்க்கிறான் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ! இன்னும் தூங்க்குவது போல் நடிக்கிறார்களே சிலர் என்ன செய்ய !

      நீக்கு
  3. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்